ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி: நாசா தகவல்!

nasa - 2026

நாசா அனுப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது விரைவில் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணரும் என நாசா தெரிவித்துள்ளது.

நாசா உடன் ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைந்து ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கியது.

பிரான்சின் கயானா பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி கடந்த மாதம் 25ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நாசா இந்த தொலைநோக்கியை 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விண்ணில் செலுத்தியிருக்கிறது. மேலும் இதன் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய தொலைநோக்கி இது என விஞ்ஞானிகள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களைத் தெளிவாக ஆய்வு செய்யத் திட்டமிட்டு நாசா ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

மேலும் பிரபஞ்சத்தில் கருந்துளை (Black Hole) போன்ற பல அறியப்படாத ஆச்சரியங்களை இந்த தொலைநோக்கியைக் கொண்டு அறிந்துகொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது, 1 மாதம் கழித்து இதன் அப்டேட்டை நாசா வெளியிட்டுள்ளது. அதில், 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒரு மில்லியன் மைல் தொலைவில் காஸ்மிக் பார்க்கிங் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இது பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் வகையில் விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை விரைவில் அனுப்பும் எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories