இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர்!

இந்தியா சற்றுமுன்
modi speech2
modi speech2

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மோடி உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் பேச உள்ளார்!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு உரையாற்றுகிறார். அன்லாக் -2.0 புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு பிரதமர் உரையாற்றுகிறார்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிப்பு தொடர்கிறது. இதில் 5 -ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 2ம் கட்ட தளர்வுகள் குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த சூழ்நிலையில், மாலை 4மணிக்கு பிரதமர் மோடி டி.வி. வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடுகிறார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேச உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.