தன் குட்டியைக் காக்க பாம்பினை ஓட ஓட விரட்டிய எலி! வீடியோ வைரல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
rat snake rats
rat snake rats

ஆபத்தில் இருக்கும் தன் குஞ்சை காப்பாற்றுவதற்காக தாய் எலி உயிரைப் பணயம் வைத்துப் போராடியது. எலிக் குஞ்சுக்குத் துணையாக இருப்பதற்காக பாம்புடன் போராடிய எலி. தன் குழந்தையின் உயிருக்குத் தன் உயிரை பணயமாக வைத்து போராடியது. இதுவே தாய்மையில் உள்ள சிறப்பு.

ஒரு எலி தன் குஞ்சோடு சேர்ந்து சாலை ஓரத்தில் உள்ள புதரில் இருந்தது. அந்த இரண்டையும் ஒரு பாம்பு பார்த்து தின்ன ஆசை கொண்டது. சுண்டெலியை வாயில் கவ்வி கொண்டது அந்த சர்ப்பம்.

அதனை விழுங்குவதற்கு முயற்சிக்கையில் தாய் எலி பாம்பு மீது வீரத்தோடு போராட்டம் ஆரம்பித்தது. இறுதியில் எலியின் தாக்குதலை தாங்க முடியாமல் பாம்பு வாலை சுருட்டிக் கொண்டு ஓடியது. வாயிலிருந்த எலிக் குஞ்சை கைவிட்டுவிட்டு புதருக்குள் புகுந்து மறைந்தது.

உயிரோடு வந்த தன் குஞ்சை பார்த்த தாய் அதை சாலையிலிருந்து ஓரத்திற்கு அழைத்து சென்றது. இந்த வீடியோவை ஐ எஃப் எஸ் ஆபிஸர் சுஷாந்த் நந்தா தன் டிவிட்டர் பேஜில் போஸ்ட் செய்துள்ளார்.

தன் குழந்தைக்காக எந்தத் தாய் ஆனாலும் எதையும் செய்ய தயங்க மாட்டாள். இந்த பூமியில் தாய்மை என்பது ஒரு பெரிய ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.