students vijayawada
students vijayawada

விஜயவாடாவில் கத்திச் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள்! விஜயவாடாவில் கல்லூரி மாணவர்கள் ரவுடிகளை போல் நடந்து கொண்டார்கள். நடுரோட்டில் நீண்ட கத்திகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள்.

இரு மாணவர் குழுவினருக்கு நடுவில் ஏற்பட்ட விவாதம் கத்தி கம்பு, கற்களால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் வரை நீண்டது. இதனால் விஜயவாடா மக்கள் பரபரப்புக்கும் அச்சத்திற்கும் ஆளானார்கள்.

இந்த சண்டையில் அடிபட்ட மாணவர்களை விஜயவாடாவில் உள்ள ஒரு பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த கேங்க் வாரில் அரசியல் கட்சித் தலைவர்களின் அடியாட்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாணவர்களின் குழுச் சண்டைக்கு எனமலகுருதுரு என்ற இடத்தில் உள்ள ரூபாய் 2 கோடி மதிப்புள்ள நிலமே காரணம் என்று தெரிகிறது. லேண்ட் டீல் தொடர்பாக இரண்டு குழுக்களும் விவாதத்தில் ஈடுபட்டதால் அது சண்டையாகமாறி உள்ளது.

students vijayawada
students vijayawada

இந்த பின்னணியில் இரு குழுக்களையும் சேர்ந்த 30 பேருக்கும் மேலாக கல்லூரி மாணவர்கள் கத்திகள் கம்புகள் கற்ளை எடுத்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டார்கள். இதனால் பலர் காயமடைந்தார்கள். அவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்த விவாதத்தில் முன்னாள் ரௌடி ஷீட்டரின் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தார்கள். இந்த சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் அடியாட்களின் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருவதால் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending