கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு!

சற்றுமுன் சென்னை புகார் பெட்டி
karupparkoottam-1
karupparkoottam-1

கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை தடை செய்யக் கோரியும் அதன் நிர்வாகிகளை கைது செய்ய கோரியும் இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வேப்பேரி போலீசார் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் நிர்வாகியான சுரேந்தர நடராஜன் மற்றும் யூடியூப் சேனலில் மற்ற நிர்வாகிகள் மீது மத உணர்வை தூண்டி கலகம் ஏற்படுத்துதல், சாதி மத இன ரீதியாக பேசி பிரச்சனை தூண்டிவிடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வேப்பேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, பாஜக.,வின் அஸ்வத்தாமன் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது, நாங்கள் அளித்துள்ள புகாரில் காவல்துறை “கருப்பர் கூட்டம்” மீது வழக்கு பதிந்துள்ளது. வழக்கு பதிந்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும். ஓவியர் வர்மா வை கைது செய்து அதன் பிறகு FIR போட்ட காவல்துறை , கருப்பர் கூட்டத்தை கைது செய்யாமல் போங்கு ஆட்டம் ஆடினால் , இவர்கள் செய்வது ஒருதலைபட்சமான நடவடிக்கை ஆகிவிடும்.

ஆகவே , கருப்பர் கூட்டத்தை சார்ந்தவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்யவேண்டும்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.