நாடே ந்யாய் -உடன் எதிர்பார்த்த காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

congress manifesto - 2026

நாடே ‘ந்யாய்’ திட்டமான ரூ.72 ஆயிரம் விவகாரத்தில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப் பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விவசாயிகளின் கடன்நெருக்கடிக்கு தீர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம், எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் நீட் தேர்வு முறைக்கு மாறாக மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு, விவசாயத்திற்கு தனிபட்ஜெட் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்டுள்ளவருமான ராகுல், காங்கிரஸ் கட்சியால் பிரதமர் வேட்பாளராக முன்வைக்கப் பட்டு, அது இயலாமல் போன கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டு வரப்பட்ட ஆக்சிடெண்டல் பிரதமர் என்று வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மூவரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இந்தத் தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பே காங்கிரசின் முதன்மையான இலக்கு என கூறப்பட்டுள்ளது.

மேலும் சில வாக்குறுதிகள்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

‘நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்

2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் .

தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை!.

அரசுப்பணிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் முழுமையாக ரத்து.

புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

பள்ளி கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.

அனைத்து மாநில விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்!

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories