‘ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தடை.

Published:

rafale deal defence - 2026 ‘ரபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை வெளியிட தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்!

இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். மேலும், பாரதி புத்தகாலயத்தில் விற்பனைக்கு இருந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

சென்னையில் இந்து ராம் இன்று மாலை வெளியிட இருந்த நிலையில் இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rafale crafts - 2026

புத்தகத்துக்கு தடை விதித்தாலும், அவற்றில் பாதி ஏற்கெனவே நாளிதழ்களில் கட்டுரைகளாக வந்துள்ளன.

ஏற்கெனவே, காங்கிரஸுக்காக தேர்தல் வேலை பார்த்து வரும் தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம், ரபேல் ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். ரபேல் குறித்த ஆவணங்களை திருட்டுத் தனமாக, பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து நகலெடுத்து, அதில் தங்களுக்கு சாதகமாகவும், இந்த அரசைக் குற்றம் சொல்லும் விதத்திலும் பெரிதாக ஏதும் அகப்படாத நிலையில், உண்மையை மறைத்து, ஆவணத்தின் ஒர் பகுதியை மட்டும் கட் செய்து வெளியிட்டு, தேசிய அளவில் அவமானத்தை சந்தித்தது தி ஹிந்து. இப்படி பாரம்பரிய மிக்க தமிழகத்தின் ஆங்கிலப் பத்திரிகை சந்தித்தது, தமிழகத்தின் பாரம்பரிய மிக்க வாசகர்களால் கூனிக் குறுகிப் பார்க்கப் பட்டது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

rafale aircraft airforce - 2026

இந்நிலையில், அவற்றின் தொகுப்புடன், புத்தகமாகக் கொண்டு வர முயன்றபோது, தேர்தல் ஆணையம் இந்த நேரத்தில் அதை வெளியிடத் தடை விதித்துள்ளது. இருப்பினும், புத்தகத்துக்குத்தானே தடை, அதில் உள்ள விளம்பரக் கருத்துகளுக்கு இல்லையே என்று, புத்தகத்தில் உள்ள ஒவ்வொன்றையும், நாளிதழில் தினசரி கட்டுரையாக மேற்படி நாளிதழ்  வெளியிடும் என்று கூறப் படுகிறது. அவ்வாறு வரும் பொழுது பத்திரிகை சுதந்திரம் பற்றிப் பேசுவார்கள்; அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

Related articles

Recent articles

spot_img