கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

சற்றுமுன்
24pcmkovil22aa - 2026

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை
நடைபெற்றது.தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்
நரசிம்மர்கோயிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை
நடைபெறுவது வழக்கம்
இந்த மாதம் சுவாதி நட்சத்திர நாளன்று மாலை 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர
ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருட்களால்
அபிசேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம்,
தீபாராதனை நடைபெற்றது
சுவாதி நட்சத்திரத்தன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையும் எனபதாள் ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய
சபையினரும் செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.