கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்! நழுவி விழுந்த பேட்டால் உயிரிழந்த சோகம்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
cricket

சேலம் அழகாபுரம் புதூர் அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் தீபக் (13). 8ம் வகுப்பு படித்து வந்தான்.

கொரோனாவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அங்குள்ள காலி நிலத்தில் தினமும் கிரிக்கெட் விளையாடி வந்தனர்.

நேற்று முன்தினம், வழக்கம் போல் தீபக் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். தீபக் பந்து வீசியபோது எதிர் முனையில் பேட்டிங் செய்த சிறுவனின் கையில் இருந்து, பேட் நழுவி பறந்து வந்து, தீபக்கின் நெஞ்சில் தாக்கியது.

cricket-bat

இதில் காயம் அடைந்த தீபக் மயங்கி சுருண்டு விழுந்தான். உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தீபக் உயிரிழந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.