பச்சை தவளையைப் பிடித்து சமைத்து யூடியூபில் பதிவேற்றம்! இருவர் கைது!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
Green-frog

யூடியூப் சேனலில் தவளைகளை வேட்டையாடி சமைத்து அதனை பதிவேற்றிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், களியல் பகுதியில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட குளத்திற்குச் சென்று தவளைகளை வேட்டையாடி, அதனை சமைத்து உண்டதுடன் , அதனை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமாருக்கு தகவல் கிடைத்ததது.

இந்த தகவலின் பேரில் விசாரணை நடத்திய வனத்துறையினர் டானியல் மற்றும் அவரது நண்பர் சுதீரும் என்பவர் ‘டேஞ்சர் தமிழன்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வந்தனர் .

பின்னர் வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள குளத்தில் தவளைகளைப் பிடித்து சமைத்து அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றிய இரண்டு பேரையும் வனத்துறை சட்டம் 1972 பிரிவு 2(16) கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.