சேவூர் ராமசந்திரனுக்கு கொரோனா உறுதி!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை
sevoor-ramachandran
sevoor-ramachandran

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் பயணிக்க இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில், சேவூர் ராமசந்திரனின் கார் டிரைவருக்கு கொரொனா உறுதியான நிலையில், தம்மை 15 நாட்களுக்கு சேவூர் ராமச்சந்திரன் தனிமைப் படுத்திக் கொண்டார்… என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.