பிரசவ வலியால் துடித்த பெண்! கடும் பனியில் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
Military-men
Military

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் 4 மணி நேரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை 4 கிமீ தொலைவில் இருந்தது. ஆனால் முழங்கால் அளவுக்கு உறைபனி இருந்ததால் வாகனங்கள் எதுவும் செல்லமுடியவில்லை.

இதனால் பெண்ணின் உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற போது இந்திய ராணுவ வீரர்கள் ஷப்னம் பேகத்தை கட்டிலில் படுக்க வைத்து முழங்கால் அளவு பனியில் சுமந்து சென்றனர்.

சுமார் 4 மணி நேரம் உறை பனியில் நடந்து சென்று அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோவை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.