பிப்ரவரி 25, 2021, 2:01 மணி வியாழக்கிழமை
More

  ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்! சாமர்த்தியமாக நடந்த நடத்துநர்.. தப்பிய உயிர்கள்!

  Home சற்றுமுன் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்! சாமர்த்தியமாக நடந்த நடத்துநர்.. தப்பிய உயிர்கள்!

  ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நேர்ந்த விபரீதம்! சாமர்த்தியமாக நடந்த நடத்துநர்.. தப்பிய உயிர்கள்!

  bus-1
  bus-1

  வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென வலி ஏற்பட்ட நிலையில் நடத்துனரின் சாமர்த்தியதால் 35 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  வேலூரில் இருந்து அரசு விரைவுப் பேருந்து 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஓசூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது கிரிசமுத்திரம் அருகே வந்தபோது திடீரென பேருந்தின் ஒட்டுநர் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் ஏறி தாறுமாறாக ஓடியது.

  அரசு பேருந்தின் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த நடத்துனர் வேலு உடனடியாக பிரேக்கை பிடித்து சாவியை எடுத்ததால் பேருந்து எதிரே வரும் வாகனங்கள் செல்லும் சாலையில் செல்லாமல் நின்றது.

  bus-2
  bus-2

  இதனால் 35 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து மயங்கி விழுந்த ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்த பொதுமக்கள் அழைத்துச் சென்றனர்.

  இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari