உஷார் மக்களே! தடுப்பூசி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

Published:

cellphone speech - 2026

தடுப்பூசி பற்றி உங்களுக்கு ஏதாவது போன் அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி முன்பதிவு செய்யக்கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு எண் போன்றவற்றை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், லிங்கை உறுதி செய்ய வேண்டும்

போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். இது போன்ற மோசடிகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதனால் இனிமேல் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img