மதுரையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த ஸ்டாலின்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
karunanidhi-statue-opened
karunanidhi-statue-opened

மதுரையில் கருணாநிதி சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மதுரை சிம்மக்கல் பகுதியில் தமிழகத்தில், ஒரு பொது இடத்தில் முதல் முறையாக மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கப் பட்டுள்ளது.

karunanidhi-statue-opened2
karunanidhi-statue-opened2

9 1/2 அடி உயரத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பீடம் மற்றும் சிலை மொத்தமாக சுமார் 23 டன் கொண்டுள்ளது. இதனை திமுக.,வின் தற்போதைய தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இந்தச் சிலை திமுக., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அமைந்துள்ளது போல் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது!

karunanidhi-statue-opened1
karunanidhi-statue-opened1

பொதுமக்கள் பார்த்துச் செல்லும் வகையில் பொது இடத்தில், வெட்ட வெளியில் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, திமுக.,வினர் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பின்னர் வருவாய்த் துறையிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.