நடிகைகளை வைத்து பாலியல் தொழில்! பிரபல இயக்குநரின் மனைவி கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
Prostitution
Prostitution

சென்னையில் பிரபல இயக்குனர் மனைவி பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் பாலியல்தொழில் நடந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு இளம்பெண்கள் மற்றும் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இயக்குனர் ஒருவரின் மனைவி காந்திமதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சினிமாவில் நடிக்க ஆசைப்படும் இளம்பெண்கள் மற்றும் மாடல் அழகிகளை நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தொழிலதிபர்களுக்கு பேரம் பேசி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.