பெண் மருத்துவர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா! ஆண் நர்ஸின் அட்டூழியம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Pornography

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சஞ்சய் காந்தி எலும்பியல் மருத்துவமனையில் 31 வயதான மருதேஷா என்ற ஆண் செவிலியராக பணியாற்றினார். அவர் அந்த ஹாஸ்ப்பிட்டலில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவர் அந்த ஹாஸ்பிடலில் பணியாற்றிய பல பெண் மருத்துவர்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து அதை படம் பிடித்துள்ளார்.

பெண் மருத்துவர்கள் அந்த ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் முன்பாக ஒரு ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்று அங்கு உடை மாற்றுவது வழக்கமான ஒன்று. அதனால் இதை நோட்டம் பார்த்த அந்த மருதேஷா அந்த அறையில் ரகசியமாக தன்னுடைய கேமரா செல்போனை வைத்து அந்த பெண் டாக்டர்கள் உடை மாற்றுவதை படம் பிடிப்பார்.

பின்னர் அந்த படங்களை தனிமையில் அமர்ந்து ரசித்துவிட்டு அதை சேமித்து வைத்துள்ளார். இதற்கிடையே கடந்த வாரம் ஒரு பெண் மருத்துவர் அந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் உடை மாற்றும்போது ஒரு இடத்தில் கேமரா இருப்பதை கவனித்து விட்டார். உடனே அவர் வெளியே ஓடிவந்து அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்திடம் இது பற்றி புகார் கூறியுள்ளார்.

உடனே ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகத்தினர் ஓடி வந்து அந்த செல்போனை கைப்பற்றியுள்ளார்கள். பிறகு அந்த செல்போனை ஆராய்ந்து பார்த்த போது அது மருதஷா என்பவரின் செல்போன் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அந்த செல்போனை ஆராய்ந்து பார்த்த போது அதில் பல பெண் டாக்டர்களின் உடை மாற்றும் வீடியோக்களிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள். போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.