60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்ஸின் தயார் நிலையில் உள்ளது: விஜயபாஸ்கர்!

சற்றுமுன் நலவாழ்வு மதுரை
vijayabhaskar - 2026
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் – மதுரை விமான நிலையத்தில்

மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

அதிகரித்து வரும் கொரானா தொற்று குறித்து குறிப்பிடுகையில்.. தற்பொழுது ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகப் படுத்துகின்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் அப்படி இல்லை என்றாலும் நாம் உற்று நோக்கி மிகுந்த கவனத்தோடு கண்காணித்துக் கொண்டிருக்கிறாம். ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் நம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கொரோனா வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் . என்றாலும் இந்த ஒரு சரியான நேரத்தில் கூட நான் இரண்டாவது டோஸ் போட்டுள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தொடர்ந்து நாம் வலியுறுத்துவது விலை மதிக்க முடியாத நம் உயிரைக் காப்பாற்ற ஒரு ரூபாய் மாஸ்க் அணிய வேண்டும். தொடர்ந்து சொல்கிறேன்… நீங்கள் உட்பட மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும். அதனால், கண்டிப்பாக மாஸ்க் அணிந்து… அடிக்கடி கைகளைக் கழுவி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் கூட நான் சுணக்கம் காட்டக் கூடாது.

ஏற்கெனவே முன்பதிவு செய்து கொண்ட முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் வாக்ஸின் கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்த வாக்ஸின் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அறிவிப்பு வந்தவுடன் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும்… என்றார்.

தேர்தல் காலங்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்த கேள்விக்கு … மாஸ்க் மாஸ்க் மாஸ்க் தான் என்று கூறினார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.