வித்தியாசமான சுவையில் குலாப் ஜாமூன்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
peanut kulabjamun 1 - 2026

நிலக்கடலை குலோப்ஜாமூன்
தேவையான பொருட்கள்
நிலக்கடலை – 150 கிராம்
முந்திரி பருப்பு – 150 கிராம்
கெட்டிபால் – 250 மில்லி
மைதா – 100 கிராம்
சர்க்கரை – 300 கிராம்
பேகிங்பவுடர் – ஒரு சிட்டிகை
ஏலக்காய் – 3
கேசரிபவுடர் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 250 மில்லி

செய்முறை
நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். நிலக்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் பாலில் ஊற விடவும். நன்கு ஊறியதும் மைய அரைக்கவும். அரைத்த விழுதில் மைதா, பேகிங் சோடா, ஏலப்பொடி, கேசரிபவுடர் எல்லாம் சேர்த்து உருட்டும் பதத்திற்கு பிசையவும். மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கொஞ்சம் கொஞ்சமாக உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு மெல்லிய சர்க்கரை பாகு காய்ச்சி ஜாமுன் உருண்டைகளை போட்டு ஊற விட்டு பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.