தட்டு உடனே காலி.. கலக்கல் காலிஃப்ளவர் மசாலா ப்ரை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kali folower
kali folower

காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

தேவையானவை:
காலிஃப்ளவர் (சிறியது) – ஒன்று,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – 200 மில்லி,
உப்பு – தேவையான அளவு.

Cauliflower-Spice-Fry-1
Cauliflower-Spice-Fry-1

செய்முறை:

காலிஃப்ளவரை, கொஞ்சம் பெரிய சைஸ் பூக்களாக நறுக்கி, தண்ணீர் விட்டு சிறிது நேரம் சூடாக்கி, தண்ணீர் வடிக்கவும். சோள மாவு, கடலை மாவு, கேசரி பவுடர், அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காலிஃப்ளவருடன் சேர்த்து நன்கு பிசிறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசிறி வைத்த காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: காலிஃப்ளவரை வேக வைத்து, மசாலா கலவையும் தயார் செய்து வைத்து, சாப்பிடும் சமயம் சூடாகப் பொரித்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

Leave a Reply