திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

thiruvattaru koil - 2026கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் அருள்பாலிக்கும் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பாராயணம், சுவாமி பவனி, கதைகளி ஆகியன நடைபெறும். இங்கு திருவிழா நாட்களில் கதைகளி பகவானுக்கு வழிபாடு என்ற வகையில் நடத்தப்படுகிறது.

எட்டாம் திருவிழாநாளான 12.ம் தேதி இரவு துரியோதன வதம் கதைகளி நடக்கிறது. ஒன்பதாம் திருவிழா நாளான 13.ம் தேதி சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளலும், பத்தாம் திருவிழா நாளான 14.ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தளியல் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

thiruvattaru function - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.