December 5, 2025, 4:08 PM
27.9 C
Chennai

பட்டாசு வெடித்தலைத் தடுப்பதன் பின்னே… ஒரு மதவெறி அரசியல்…!

crackers - 2025

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு… புகைப் பழக்கம் புற்றுநோய்க்கு வித்திடும்… –  இப்படி எச்சரிக்கை செய்து, சிகரெட்கள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது…!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு- என்று சாராய வியாபாரிகளான மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்து, கேடெனத் தெரிந்தும், அட… தெரிந்தே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வருடம் முழுக்க எத்தனை பெண்களின் தாலியறுத்து இந்த அரக்கர்கள் தங்கள் கல்லா பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..?!

நெடுஞ்சாலைக்கு பக்கத்துல டாஸ்மாக் இருக்கக் கூடாதுன்னு நீதிமன்றம் சொன்னா… கடையை எடுக்குறதுக்கு பதிலா… நெடுஞ்சாலையையே தூக்கிட்டு, கிராமத்து சாலையாக்கி நீதிமன்ற தீர்ப்பை நமுத்துப் போக செய்யிற அளவுக்கு மூளை வேலை செய்யிதுல்ல…

சிகரெட் புடிக்கக்கூடாதுன்னு எவ்ளோதான் இருந்தாலும், சிகரெட் புடிக்கிறதை ஒட்டுமொத்தமா நிறுத்தறதுக்கு வக்கில்லாம… ஒவ்வொரு வருடம் பட்ஜெட்லயும் சிகரெட்க்கு மட்டும் வரிய கூட்டிக்கிட்டே போயி.. அத ஒரு காஸ்ட்லி சமாசாரமா ஆக்கி… பலபேரோட பாக்கெட்டை நசுக்கி பிசுக்கி வாங்கி மத்திய அரசுக்கு கஜானாவ நிரப்பத் தெரியுலதுல்ல…!

சிகரெட் புடிக்காதீங்கன்னு உடல் நலத்துக்கு கேடுன்னு எவ்ளோ வெளம்பரம் கொடுக்கிறீங்க…?! டிவில., பேப்பர்ல..ன்னு! சினிமாவுல மது குடிக்காதீங்கன்னு எவ்ளோ தூரத்துக்கு சப் டைட்டில் கார்டு போட கத்திரிக்கோல வெச்சிட்டி நிக்கிறீங்க சென்சார்ல..?!

இது எதுனா பட்டாசு வெவகாரத்துல பண்ணினீங்களா?

போதைப் பாக்கு வெவகாரத்துல தமிழ்நாடே காறித் துப்புது.. மாநில அரசின் அமைச்சர்களையும், கூடவே போலீஸு கார தொரமார்களையும் ஐஜி டிஐஜின்னு சில ஜிக்களையும்! தடை போட்டது அரசாங்கம்… தடையை மீறி சப்ளைக்கு வழி சொல்லுறது அதே அரசாங்க அதிகாரிகளும் போலீஸும்…! அதாவது தடையைப் போட்டா, தடைமீறி வியாபாரம் செய்யவெச்சா முறைகேடா கல்லா கட்டலாம்னு செய்யிற சதித்திட்டம்…!

சரி…  சிகரெட், மது புட்டி பட்டியல் படி… பட்டாசு விவகாரத்தில் என்ன செய்திருக்கலாம்..?!!

வெடி வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு – அப்டின்னு வெடில பிரிண்ட் போட்டிருக்கலாம்!

வெடி வெடித்தல் சுற்றுச்சூழலை பாதிக்கும் – அப்டின்னு சினிமால வெடி வெடிக்கும் போது டைட்டில் கார்டு போடச் செய்திருக்கலாம்.. .

வெடி பொருள்களுக்கு கூடுதல் வரி விதிச்சி… வியாபார அளவை கட்டுப் படுத்தியிருக்கலாம்…

சீன வெடி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கலாம்…

வெடி வியாபாரத்தை கட்டுப்படுத்தி.. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்னு மட்டுப் படுத்தியிருக்கலாம்…

மீடியாக்கள்ல விளம்பரம் கொடுத்து, பட்டாசு வெடித்தலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கருத்து இயக்கங்கள் நடத்தியிருக்கலாம்!

ஆனால்… இவை எதையுமே செய்யல…! நேரா… நீதிமன்ற தடங்கல்கள் தான்! பட்டாசு தயாரிப்பு தமிழ்நாட்ல மட்டுமே அதிகம்… குறிப்பா சிவகாசி! அதுவும் நாடார்கள் தொழில்! இதுவே குஜராத்திகாரன், மார்வாடிகள் தயாரிப்பு தொழிலா இருந்தா.. இப்படி ஒரு தீர்ப்ப உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்குமாங்கிறது சந்தேகம்தான்! மொதல்ல இப்படி ஒரு கேஸை சுற்றுச்சூழல்னு சொல்லி இந்த ராட்சசனுங்க போட்டிருப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்!

கேஸ் போட்டவர், வழக்குல வாதாடுனவன், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் – அதை செயல்படுத்த ஆர்வமா இருக்குற தமிழக அரசு குறிப்பா 6 மாசம் சிறைன்னு சொல்லி அறிக்கை கொடுக்குற வெளக்கெண்ணெய்கள்… எல்லாருக்குமே ஒரே ஒரு நோக்கம்தான் இருக்கு!

இவங்க யாருமே சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அக்கறை காட்டவே இல்ல…!

தொடக்கப் பள்ளியிலேருந்து, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளின்னு கடந்த கால் நூற்றாண்டா… கிறிஸ்துவ மிஷனடி பள்ளிகள்ல ‘பட்டாசு வெடிக்க மாட்டோம்’னு பள்ளிக்கூடப் பிள்ளைங்கள சபதம் எடுக்க வெச்சி…

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை நாசமாக்க, அதுல இருக்கற இந்து ஆன்மிக தொடர்பை அறுத்துப் போகச் செய்யிறதுக்காக மேற்கொள்ளப் பட்ட முயற்சி…

மூன்றாம் ஆயிரமாவது ஆண்டை ஆசிய அறுவடை குறிப்பாக இந்திய அறுவடைன்னு ஒரு போப்பு இங்கே வந்து அறைகூவல் விட்டுட்டுப் போறார்னா…

அதை செயல்படுத்த இத்தன பேரு வரிந்து கட்டிக்கிட்டு வேலை செய்யிறாங்கன்னா…

இவங்களுக்கு தக்க பதிலடிகொடுக்குறா மாதிரி… நாம் சபதம் ஏற்கும் நாளாக இந்த தீபாவளி திருநாள மாத்திக் காட்டணும்!

வெடி வெடிக்கிறது ஒரு நாள் கூத்து.! சிகரெட்டும், தண்ணியும் பான்பராக் போதைப் பாக்கும் நாள் முழுக்கன்னு எடுத்துக் காட்டியிருக்க வேணாம்..!?

வருடம் முழுக்க செய்யிற தப்புக்கெல்லாம் எச்சரிக்கை மட்டும் போடுவாங்களாம்… ஒரு நாள் கூத்துக்கு தடை போடுவாய்ங்களாம்..! நிலவரத்தை சின்னப் புள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்க….!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories