கமல்ஹாசன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
kamal 1 - 2026

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழகம் மற்றும் லண்டனில் சொத்து இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்து.

நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று தனது பேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து விவரம், தொழில், தன் மீதான வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை அளித்துள்ளார். தற்போது அவை வெளியாகியுள்ளது.

அதன்படி, கமல்ஹாசனுக்கு 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அளவில் அசையும் சொத்தும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது

அதோடு அவரது கடன் அளவு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாயாகும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாயாக உள்ளது. மேலும் அவருக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் லெக்சஸ் மாடல் காரும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரும் உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் லண்டனிலும் வீடு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது லண்டனில் கமல்ஹாசனுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு வீடு உள்ளதாக வேட்புமனுவில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.