வயதில் சிறியவரையே மணப்பேன்: பிரபல நடிகை பதிவு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
Kavitha - 2026

பிரபல கவர்ச்சி நடிகை தன்னை விட வயதில் சிறிய வரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

முன்னணி நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கவிதா ராதேஷ்யம்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போதும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில், “நண்பர்களே, நான் எந்த வித ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. எனக்கு நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடைபெறவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன்.

ஆனால் என்னை விட வயதில் சிறிய வரைதான் கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன். தயவு செய்து என்னை பற்றி வதந்திகளை எழுதுவதை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.