ஏப்ரல் 22, 2021, 7:59 காலை வியாழக்கிழமை
More

  ஆ.ராசாவின் அசிங்கப் பேச்சால்… திமுக.,வுக்கு தோல்வியே! ‘ஐபேக்’ டீம் அனுப்பிய மெயில்?

  திமுகவிற்கு எதிராக அனைத்து பெண்களும் வாக்களிக்க தயாராகி விட்டனர். திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் !

  anandh tiwari mail2 - 1

  ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சுகளால், திமுக.,வுக்கு பெரும் தோல்வியே ஏற்படும் என்றும், பெண்களிடம் திமுக., பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் திமுக.,வுக்காக ரூ.370 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐபேக் குழுவின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் அனுப்பியதாகக் குறிப்பிடப் பட்டு, சமூக வெளியில் உலவும் இ-மெயிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில், திமுக.,வுக்கே உரிய பெண்கள் மீதான வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசினார் திமுக., கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. அவரது கருத்துகள் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தின.

  ஆ.ராசாவின் பேச்சுக்களுக்காக கண்ணீர் விட்டு, ஊடகங்களின் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். அது, பெண்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும், ஆ.ராசா மற்றும் திமுக., மீதான எதிர்ப்புணர்வையும் வளர்த்தது.

  இதை அடுத்து, தேர்தல் ஆணையத்தில் அதிமுக., தரப்பில் புகார் அளிக்கப் பட்டது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஆ.ராசாவிடம் விளக்கம் கேட்டது. பின் 2 நாட்களுக்கு ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

  பின்னர் ஆ.ராசா அளித்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இருப்பினும், ஆ.ராசாவுக்கு தடை விதித்தோ, ஆ.ராசாவை விலக்கியோ திமுக., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்நிலையில், திமுக.வுக்காக தேர்தல் வேலைகளை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆனந்த் திவாரி என்பவர், ஸ்டாலின் குழுவுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியதாகக் குறிப்பிடப்பட்டு, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறி என்றாலும், இந்த இமெயிலில் குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், திமுக., சில நடவடிக்கைகளை பின்னர் எடுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

  இது குறித்து சமூகத் தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்:


  முக்கியச் செய்தி – கவனிக்கப்பட வேண்டிய செய்தீ

  திரு.ஆனந்த் திவாரி (ஐபேக் டீமின் முக்கிய அதிகாரி) கடந்த மார்ச் 28, 2021 (ஞாயிறு) இரவு 11.55 மணியளவில் திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்புகிறார்.

  அதன் சாராம்சம் பின்வருமாறு :- நடக்கவிருக்கின்ற தமிழக பொதுத் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியுறும் நிலையில் தான் கள நிலவரம் தற்போதுள்ளது.

  தங்களது கழக கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான திரு.A .ராஜா அவர்களது பேச்சு திமுகவை அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. இதனை சரி செய்ய வே முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

  anandh tiwari mail1 - 2

  கடந்த 2 நாட்களாக நாங்கள் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி பெண்கள் அனைவரும் ( தி மு க கட்சி சார்ந்த பெண்கள் உட்பட) திமுகவிற்கு எதிரான மனப்பான்மையில் உள்ளனர்.

  நண்பர்கள் மூலம் கருத்து கணிப்புக்களை நமக்கு சாதகமாக மாற்ற முயற்சித்த அனைத்து முயற்சிகளும் தங்களது கழக நிர்வாகிகளின் தவறான பேச்சால் வீணாகிவிட்டது.

  தற்போதைய கள நிலவரம் அதிமுகவிற்கு சாதகமாகவே உள்ளது.

  நாம் உடனடியாக செய்ய வேண்டியவை கீழ்வருமாறு:

  1. திரு A. ராஜா அவர்கள் உடனடியாக பிரஸ் மீட் கூட்டி தமிழக முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
  2. திரு. A. ராஜாவை அழைத்து தலைமைக் கழகம் கண்டித்து பெண்கள் மத்தியில் நற்பெயர் வாங்க முயற்சிக்க வேண்டும்.
  3. திரு .A . ராஜாவை இனிமேல் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக்க கூடாது
  4. அனைத்து கழக நிர்வாகிகளும் பெண்களுக்கெதிரான விஷயங்களை பேச அனுமதிக்க கூடாது.

  அன்புடன்,
  அனந்த் திவாரி

  anandh tiwari mail - 3

  இந்த இ-மெயில் ஹேக் (hacking) செய்யப்பட்டது என்று திமுக கூறலாம்.

  முன் தேதியிட்ட இ-மெயிலை ஹேக் செய்ய வாய்ப்பேயில்லை.

  இந்த இ-மெயில் போட்டோ ஸாப் (photoshop) செய்யப்பட்டது என்று திமுக சொல்லலாம்.

  எந்த சாப்ட்வேரில் (Software) போட்டு சரி பார்த்தாலும் இது போட்டோஸாப் செய்யப்பட்டதில்லை என்பது தெளிவாக புரியும். DMK IT விங் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

  திமுகவிற்கு எதிராக அனைத்து பெண்களும் வாக்களிக்க தயாராகி விட்டனர். திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் !!!!!!!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »