கிட்ட வரச் செய்யும் செட்டிநாட்டு வெங்காய வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Pumpkin vadakam - 2026

செட்டி நாட்டு வெங்காய வடகம் தேவையான பொருள்கள் :
சின்ன வெஙகாயம் – 2 கிலோ,
பூண்டு – ¼ கிலோ,
உளுத்தம் பருப்பு – 400 கிராம் (வெள்ளை), சிகப்பு மிளகாய் – 100 கிராம்,
சீரகம் – 50 கிராம்,
பெருங்காயத் தூள் – 50 கிராம்,
கடுகு – 25 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு.
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.