86 வயது மூதாட்டி ஆம்புலன்சில் வந்து வாக்கு பதிவு!

சற்றுமுன் தமிழகம்
old lady 85 - 2026

மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்.

old lady 90 - 2026

இந்நிலையில் தனது ஜனநாயக கடமையாற்ற வேண்டி தனது குடும்பத்தார் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மூதாட்டி வாக்குச் சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இதேபோன்று சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் தொகுதியில் 95 வயதான மூதாட்டி வந்து வாக்களித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.