சந்தேகம்.. காதலனின் ஆணுறுப்பை வெட்டி கழிவறையில் போட்ட காதலி!

உலகம் சற்றுமுன்
thaivan - 2026

தைவானில் 40 வயதுடைய பெண் ஒருவர், ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த தனது காதலனின் ஆணுறுப்பைக் கத்தரிக்கோளால் துண்டு துண்டாக அறுத்து கழிவறைக்குள் வீசி ப்ளஷ் செய்தது உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நெருக்கமான காதலன், தன்னை மட்டுமல்லாமல் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அந்தப் பெண் சந்தேகப்பட்டதால், தூங்கிக் கொண்டிருந்த காதலனின் ஆணுறுப்பை இப்படி வெட்டி வீசி எறிந்திருக்கிறார்.

தைவானின் சாங்குவா மாநிலத்தில் வசித்து வருகிறார் ஹுவாங். இவரும், இவரது காதலியும் அந்த பகுதியில் தனியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். தன்னுடைய காதலி சமைத்த சிக்கன் நூடுல்ஸை வைனில் தோய்த்து இரவு உணவாக சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார் ஹுவாங்.

thaivan 2 - 2026

காதலன் ஆசையாசையாய் சாப்பிட்ட சிக்கன் நூடுல்ஸில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்த காதலி, ஹுவாங் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது ஆணுறுப்பை துண்டு துண்டாக வெட்டி, கழிவறையில் வீசியிருக்கிறார். அலறித் துடித்த ஹுவாங்கின் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது ஹுவாங்கின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவரது ஆணுறுப்பில் 1.5 சென்டிமீட்டர் அளவு மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

போலீசார் விரைந்து சென்று காதலியை கைது செய்தனர். தன்னுடைய காதலன் வேறொரு பெண்னுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டதால், உணர்ச்சிவசப்பட்டு இப்படி செய்து விட்டதாகவும், இந்த செயலுக்காக தான் மிகவும் வருந்துவதாகவும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் காதலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.