செல்போனில் கொரோனா டெஸ்ட்!

இந்தியா சற்றுமுன்
eye - 2026

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையானது வாயிலும், மூக்கிலும் சளி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சீனாவில் ஆசனவாயின் மூலமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் செல்போனில் கண்களை ஸ்கேன் செய்து கொரோனா பரிசோதனை செய்யும் புதிய செயலியை semi RF என்ற தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஒருவரது இரண்டு கண்களையும் இந்த செயலி மூலம் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இன்னும் ஒரு மாதம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.