
வீட்டின் பூட்டை உடைத்து 4 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் பகுதியில் சந்திரன்- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது வீட்டின் கீழ் தளத்தில் பூட்டிவிட்டு அனைவரும் மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் செல்வி அதிகாலையில் கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
இதனையடுத்து பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிப்பது தெரிய வந்துள்ளது.
இதனைதொடர்ந்து செல்வி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் 4 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.