
வத்திராயிருப்பு அருகே சிதிலமடைந்த ஆலய தெப்பக்குளம்:
அறநிலையத்துறை கண்டு கொள்ளுமா?
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சிக்கு பாத்தியப்பட்டட மாவூத்தில் அமைந்திருக்கும் உதயகிரி நாதர், சடதாரியம்மன், கருப்பசாமி கோயில், அஞ்சநேயர் கோயில், மலையின் உச்சியில் அமைந்திருக்கும் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 448 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில், பல நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.
இக்கோவிலுக்கு பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி, சித்திரை திருவிழா, மாதந்தோறும் அமாவாசை போன்ற நாட்களில் வந்து தரிசனம் செய்து சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட, தெப்பக்குளம் பாராமரிப்பு இல்லாமல், சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்த நிலையில் உள்ளது.
தெப்பக்குளத்தில் படிக்கட்டுகள் சரியில்லாத காரணத்தால், பக்தர்கள் குளிக்கும் போது நீரில் முழ்கி பக்தர்கள் பலர் உயிரிழப்பதற்கு இடிந்துள்ள படிக்கட்டுகள் காரணமாக இருந்து வருகிறது.

மேலும், உயிர்பலியை தவிர்க்கவும், இக்கோவிலின் தெப்பக் குளத்தை பராமரிப்பு செய்ய இதனை சார்ந்த கோவில் நிர்வாகிகளும், அறநிலையத்துறையை சார்ந்தவர்களும் இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை.
இக்கோவிலுக்கு வந்து செல்லும் பெண் பக்தர்களுக்கு கழிப்பிட வசதியும், பாதுகாப்பற்ற சுழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இக்கோவிலைட் சுற்றி அந்நியர்கள் மது, சூதாட்டம் போன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்க முடியாத சூழ்நிலையில் பக்தர்கள் இருந்து வருகின்றனர். இதனை கோவில் நிர்வாகிகளும் கண்டு கொள்ளவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அலுவலர்கள், இந்த புனித மிக்க பெருமாள் ஆலய தெப்பக்குளம் படிக்கட்டுகள், சிதலமடைந்த மதிற்சுவர்களை உடனடியாக சீரமைக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.