வயிற்றுப் பொருமல் நீக்கும் மாங்காய் வற்றல் பத்தியக் குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mango vatral pathiya kuzhambu
mango vatral pathiya kuzhambu

மாங்காய் வற்றல் பத்தியக் குழம்பு

தேவையானவை:
மாங்காய் வற்றல் – தேவைக்கேற்ப,
புளி – சிறு எலுமிச்சை அளவு,
மிளகு – முக்கால் டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
நெய் – 2 டீஸ்பூன்,
அரிசி – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் (சிறியது) – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மாங்காய் வற்றலை 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இத்துடன் புளி, உப்பு, பெருங்காயத்தூள், நெய்யில் வறுத்த மிளகு, சீரகம் மற்றும் அரிசி, மஞ்சள்தூள், கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வழிக்கவும். இத்துடன் மிக்ஸியை கழுவிய நீரையும் சேர்த்து நன்றாக கலக்கி வாணலியில் விட்டு, 2 கொதி வந்ததும் இறக்கவும். பிறகு நெய்யில் கடுகு, மிளகாய் தாளித்து, மீதமுள்ள கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு பரிமாறவும்.

இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.