கொரோனாவை ‘ஓசி’யில் பரப்பும் திமுக.வினர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai dmk corona
madurai dmk corona

நாட்டில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்மாநிலத்தில், கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு, முடக்கத்தில் சில தளர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக, பெரும்பான்மை இந்துக்களின் அன்றாட ஆலய வழிபாட்டு நடைமுறைகளைக் கூட தடை செய்து, ஆலயங்களில் கூட்டம் கூடி தரிசித்தல், பிரசாதங்கள் விநியோகம் செய்தல் உள்ளிட்டவை மூலம் கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது அன்ன தானம் என்ற பெயரில் திமுக.,வினர் பாதுகாப்பு நடைமுறைகள் எதையும் கைக்கொள்ளாமல், கொரோனா பரப்பும் மையங்களாக இவற்றை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

madurai dmk corona1
madurai dmk corona1

இன்று மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே திமுகவி.,னர் அன்னதானம் வழங்கியபோது, பொது மக்கள் தனிநபர் இடைவெளி எதுவும் பின்பற்றாமல் முககவசமும் அணியாமல் பெற்றுச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் என பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

அந்த வரிசையில் மதுரையிலும் பெருமளவு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், திமுக.,வினர் இது போன்று செயல்படுவது மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பது மட்டுமன்றி, ஆளும் கட்சிக்கும் பெரும் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.