15 வயது சிறுமிக்கு திருமணம்! தடுத்து மீட்ட காவல் துறை!

child marriage

மதுரையில் 15 வயது சிறுமிக்கும் அவரது தாய்மாமாவிற்கும் நடைபெற இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மதுரை செல்லூர் மேல தோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய்மாமாவிற்கும் நேற்று காலை திருமணம் திட்டமிட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த திருமணம் குறித்து செல்லூர் போலீசார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுவினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் மற்றும் போலீசார் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை அங்கிருந்து மீட்டு கடச்சனேந்தல் பகுதியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த அறிக்கையை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து சிறுமியின் உறவினர்களை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

ஊரடங்கை பயன்படுத்தி மதுரையில் ஒரே நாளில் இரண்டு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories