தடுப்பூசி: மாடு, தங்க நெக்லஸ் பரிசு! எங்க தெரியுமா?

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
india cows 1 web

கொரோனா தொற்றினால் ஏற்படுகிற பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பொதுமக்களுக்கு போட்டு வந்தாலும், தடுப்பூசி குறித்த அச்சமும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது.

தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி, பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்த தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒவ்வொரு வாரமும் மாடு பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு தாய்லாந்தில், ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை குறிப்பிட்ட மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டம் 24 வாரங்களுக்கு தொடரும் என்றும், இந்த பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து மக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஆர்வத்தையும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எங்கள் தடுப்பூசி பதிவு எண்கள் ஓரிரு நாட்களில் ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மாவட்டத் தலைவர் பூன்லூ தம்தானுரக் கூறியுள்ளார்.

தாய்லாந்தின் இன்னும் சில மாகாணங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தங்க நெக்லஸ், தள்ளுபடி கூப்பன்கள் போன்றவைகளுடன் தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறைய கவர்ச்சிகரமான சலுகைகளையும் அறிவித்துள்ளன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.