
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ காசிப்பூர் பகுதியை சார்ந்தவன் ஆபிட். இவன் முஸ்லீம் மதத்தை சார்ந்தவன் ஆவான். இந்நிலையில், தனது பெயரை சுனில் குமார் என்று போலியாக கூறி, இந்து பெண்மணியை காதல் வலையில் விழ வைத்துள்ளான்.
சில மாதங்கள் கழித்து தனது உண்மையான சுயரூபத்தை ஆபிட், தன்னை நீ திருமணம் செய்துகொள்ள முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், உனது பெயர் மற்றும் அடையாளம் என அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்மணியை, உன்னுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வேன், தனிமையில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிடுவேன், குடும்பத்தோடு அனைவரையும் கொலை செய்வேன் என்று மிரட்டி இருக்கிறான்.
இதனால் பயந்துபோன பெண்மணி அவனை திருமணம் செய்துள்ளார். இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்துக்கும் மாறியுள்ளார்.
மதம் மாறி வற்புறுத்தலால் திருமணம் செய்த பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக, ஆபிட்டுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரியில் இதே போன்று மற்றொரு இந்து பெண்ணை ஏமாற்றி, மதம் மாற்றி திருமணம் செய்துள்ளான்.
இதனையடுத்து, ஆபிட் மீது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காசிப்பூர் லக்னோ ஏ.சி.பி சுனில் குமார் வழக்குப்பதிவு செய்து ஆபிட்டை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A woman lodged a complaint stating that a man named Abid befriended her impersonating as Aditya Singh. Later, he got the woman converted to Islam & married her by threatening to leak their intimate videos online: Sunil Kumar, ACP (Ghazipur), Lucknow Police (1/2) (30.05) pic.twitter.com/seVxPGrN5h
— ANI UP (@ANINewsUP) May 31, 2021
Later, she came to know that Abid was already married & had 7 children. He again married a Hindu woman by Hindu rituals in February this year. An FIR has been lodged against him under IPC & Prohibition of Unlawful Religious Conversion Act: ACP, Ghazipur, Lucknow (2/2) (30.05) pic.twitter.com/bXNzHTiBB3
— ANI UP (@ANINewsUP) May 31, 2021