விதைகள் மூலம் பயோவார்… கைலாசாவை அழிக்க சூழ்ச்சி: நித்தியானந்தா!

சற்றுமுன் தமிழகம்
nithiyanata 3
nithiyanata 3

கைலாசா நாட்டின் மீது தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சிப்பதாகவும், தாங்கள் கேட்காமலை மர்ம விதைகளை அனுப்பி ‘பயோவார்’ நடத்த சதி நடப்பதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் வாங்கிய தனித்தீவில் ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக சொல்லிக்கொள்கிறார். அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்தாக நித்யானந்தாவே கூறியிருந்தார்.

கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது.

அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் கைலாசா நாட்டை நித்யானந்தா நிர்மானித்தாரா அல்லது இந்தியாவிலேயே இருந்து ப்ளூ ஸ்கிரினில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவரது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

nithiyanata
nithiyanata

ஆனால் அடிக்கடி யூடியூபில் நித்யானந்தா பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். இந்த சூழலில் நித்யானந்தா தனது நாட்டில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சி செய்வதாகவும், நாங்கள் கேட்காத விதைகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளதாகவும், இது ஒரு பயோ வார் என்று கூறியுள்ளார்.

தன்னை பல பேர் பல்வேறு வகையில் தாக்கிவிட்டதால் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாக அந்த பதிவில் குறிப்பிட்ட நித்யானந்தா, விதைகளை அனுப்பி பயோவார் நடத்த சதி நடப்பதாக கூறியுள்ளார்.

விதைகளை அனுப்புவது என்ற விஷயம் கொஞ்ச நாளைக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தது. அங்கு ஆர்டர் செய்யாமலே சிலருக்கு விதைகள் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த விதைகள் நட்டால் மண் நாசமாகும் என்று சொல்லப்பட்டது.

மேலும் அமெரிக்காவின் நடத்தப்பட்ட பயோவார் என்று கூட கூறினார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவை பொய்யானது என்பது தெரியவந்தது. அதுமாதிரி இதுவும் கூட பொய்யாக இருக்கலாம்.

எனினும் அவர் வெளிட்ட பதிவல் சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக “பயங்கரவாதத்தை விதைகள்” மூலம் அனுப்பும் கொடிய சதி நடப்பதாகவே நித்யானந்தா மிக சீரிஸாக கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய வெப்சைட்டில் எங்குமே அட்ரஸ் இல்லை. எனவே எப்படி விதைகளை அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை.

nithi
nithi

உண்மையில் கைலாசா என்ற ஒரு நாடு இருக்கிறதா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இ கைசலா என்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இணையதள முகவரிகள் எங்கிருந்து இயங்குகின்றன.

அதை யார் இயக்குகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது உலக நாடுகளுக்கு சவாலான காரியமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் என்ன காரணமோ இதுவரை கைலாசாவை கண்டுபிடிக்க உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.