March 20, 2025, 11:14 AM
31 C
Chennai

எங்கள் அணியால் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை! நாசா!

சந்திரயான் 2 விண்கலத்துடன், அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் குறித்த முக்கிய தகவலை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இன்று வெளியிட்டுள்ளது.

உலகிலேயே முதல் நாடாக, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது.

புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவைச் சென்றடைந்த விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாகப் பிரித்து விடப்பட்டது. இதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர், நிலவின் பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் தொடர்ந்து நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரிந்த லேண்டர் பகுதியை 100 கி.மீ. தொலைவிலிருந்து படிப்படியாக குறைத்து நிலவின் பரப்பிலிருந்து 35 கி.மீ. தொலைவுக்கு விஞ்ஞானிகள் கொண்டு வந்தனர்.

லேண்டர் நிலவுக்கு மிக அருகே வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அதை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் தொடங்கினர். ஆனால் கடைசி நிமிடத்தில் லேண்டர் தொடர்பை இழந்தது.

நிலவில் காணாமல் போன லேண்டரை கண்டறிய முடியுமா, அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்புடன், விக்ரம் லேண்டரின் தொடர்பு எதனால் துண்டிக்கப்பட்டது என்பது குறித்து தேசிய அளவிலான ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தாலும், முன்னணி விஞ்ஞானி ஆய்வு மையமான நாசா உதவியை இஸ்ரோ நாடி இருந்தது.

இந்நிலையில், நாசா இன்று வெள்ளிக்கிழமை (செப்.27) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில். சந்திரயான் -2 விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7 (அமெரிக்காவில் செப்டம்பர் 6), சிம்பிலியஸ் என் மற்றும் மான்சினஸ் சி பள்ளங்களுக்கு இடையில் ஒரு சிறிய உயரமான மென்மையான சமவெளிகளில் தரையிறங்க முயன்றது. விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங்காக மாறிவிட்டது. லேண்டர் எங்கே உள்ளது என்பது கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி தரையிறங்கும் இடத்தைக் கடந்து, அந்தப் பகுதியின் உயர் தெளிவான படங்களை நாசாவின் எல்.ஆர்.ஓ (Lunar Reconnaissance Orbiter) மூலம் எடுக்கப்பட்டன. “தரையிறங்கும் பகுதி படமாக்கப்பட்டபோது இருட்டான நேரமாக இருந்தது. இதனால் படங்கள் இருட்டான நேரத்திலேயே எடுக்கப்பட்டதால் லேண்டர் இருக்கும் இடத்தை துல்லியமாக படமாக்க முடியவில்லை. இதுவரை விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை, எல்.ஆர்.ஓ.சி குழுவால் கண்டுபிடிக்கவோ அல்லது படம்பிடிக்கவோ முடியவில்லை என்று நாசா ஒரு டிவிட்டில் தெரிவித்துள்ளது.

லேண்டர் இருக்கும் இடம் பெரிய நிழல்கள் நிறைந்த நிலப்பரப்பின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாகவும், அந்த நிழலில் லேண்டர் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த இடம் தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழங்கால நிலப்பரப்பில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபரில் சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து மீண்டும் லேண்டரைக் கண்டுபிடித்து படமாக்க எங்கள் விண்கலம் முயற்சிக்கும், அப்போது வெளிச்சம் சாதகமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

லேண்டர் தரையிறங்கும் தளத்தின் மையப்பகுதி முழுவதும் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்பிட்டர் கேமரா குயிக்மேப்பில் இருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்ஞான் லேண்டர் ஆயுட்காலம் 14 நாட்கள். அந்த கெடு ஏற்கெனவே கடந்து விட்டது. எனவே இனிமேல் அதனால் நமக்கு எந்த சிக்னலையும், தரமுடியாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதாக பாஜக., குற்றச்சாட்டு!

தொடர்ந்து கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேறிய மேயர் சங்கீதாவின் செயலை கண்டித்தும் மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதத்தையும் அவமதித்துவிட்டதாக மேயருக்கு

பஞ்சாங்கம் மார்ச் 18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆர்.எஸ்.எஸ்., பற்றிய பிரதமர் மோடியின் அனுபவங்கள்!

இத்தகைய பவித்திரமான அமைப்பிடமிருந்து நற்பண்புகள் எல்லாம், எனக்குக் கிடைத்தது என் நற்பேறு.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் -

திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? - என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Entertainment News

Popular Categories