சைட் டிஷே வேண்டாம்… மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Mixed Vegetable Chapati 1
Mixed Vegetable Chapati 1

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 200 கிராம்,
கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் – தலா ஒரு சிறிய கிண்ணம்,
பச்சைப் பட்டாணி – 100 கிராம் (தோலுரித்தது),
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
இஞ்சி விழுது, பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் ,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாகத் திரட்டவும். சப்பாத்திகளை தவாவில் போட்டு வாட்டி எடுக்கவும். பிறகு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெய்விட்டு சூடாக்கி, கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு இதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இந்த முறையில் சப்பாத்தி செய்தால் அதற்கு சைடிஷ் தேவை இல்லை. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது, இந்த வெஜிடபிள் சப்பாத்தி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.