
புளிப்பொங்கல்
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி – 200 கிராம்,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
காய்ந்த மிளகாய் – 2 கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 50 மில்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வரகு அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் களைந்துகொள்ளவும். புளியை நன்கு கரைத்து ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் புளித்தண்ணீரை அளந்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி காய்ந்த மிளகாயைப் கிள்ளிப்போட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். பின்னர் இதனுடன் அளந்து வைத்திருக்கும் புளித்தண்ணீரைச் சேர்க்கவும். பிறகு ஊறவைத்த வரகு அரிசியையும் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி ஐந்து விசில்விட்டு இறக்கவும். புளிப்பொங்கல் ரெடி. பொங்கலின் மேல் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டுக் கலந்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: புளிப்பு சாப்பிட ஆசை இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப் பொங்கலை மிகவும் விரும்புவார்கள்.