
பொதுவாக பறவைகள் கனவில் வந்தால் நாம் இருக்கும் இடத்தின் சூழ்நிலை மாறப்போவதன் அறிகுறியாகும்.
பறவைகளுக்கு தானியம் தூவுவது போல் கனவு வந்தால், காதலில் வெற்றி பெற போகிறோம் என்று பொருள்.
பறவைகளைக் கையில் தூக்கி செல்வது போல் கனவில் வந்தால், தேர்வில் வெற்றி பெற போகிறோம் என்று பொருள்.
குருவிகளை கனவில் கண்டால் குடும்பத்தில் கஷ்டங்களும், நோய்களும் நீங்கும்.
குருவிகள் ஜோடியாக இருபது போல கனவு வந்தால் நல்ல செய்தி வந்து சேரும்.
குருவி கூடு கலைக்கப்படுவது போல கனவு வந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்.
தூக்கணாங்குருவி மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் நல்ல சகுனம்.
பாடும் பறவையை கனவில் கண்டால் மன மகிழ்ச்சி உண்டாக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று பொருள்.