எடை குறைந்த ரகசியம் இது தான்: குஷ்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
kushpoo
kushpoo

குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமாகி, கொழு கொழு கன்னங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை குஷ்பு.

லாக்டவுன் காலத்திற்கு பின் அவர் திடீரென உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக தோற்றமளித்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் அதற்கான விளக்கத்தை அவர் கூறியுள்ளார். திருமணத்திற்கு பின் அதிகரித்த 20 கிலோ எடையை குறைக்க தான் லாக்டவுன் சமயத்தை பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளார்.

இதற்கென தினந்தோறும் யோகா, நடைபயிற்சி என 40 நிமிடம் செலவழித்து, பிரியாணி, ஐஸ்கிரீம்களையும் தவிர்த்து ஸ்டிரிக்ட் டயட்டை பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 92 கிலோவிலிருந்து 75 கிலோவிற்கு உடல் எடையை குறைத்ததாகவும், மேலும் 6 கிலோ குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.