தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நிர்ணய அட்டவணை வெளியீடு!

கல்வி சற்றுமுன் தமிழகம்
teacher-3
teacher-3

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளைப் பொருத்த வரையில் தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கான மாதிரி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் பணியிட நிர்ணய மாதிரி அட்டவணை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மாறுபட்டு காணப்படும்.

அதனால் இந்த ஆசிரியர் பணி நிர்ணய அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணி நிர்ணய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தொடக்கப்பள்ளியில் 60 மாணவர்கள் வரை உள்ள பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நிர்ணயம், 61 முதல் 90 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்கள் என நினைக்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 121 முதல் 200 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களும், 200க்கு மேல் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.