#ThanjavurBigTemple ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டாக்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
tanjoretemple2 - 2026

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் தஞ்சாவூர் பெரிய கோவிலும் இடம்பிடித்துள்ளது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா இன்று (பிப்.,05) கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குடமுழுக்கு விழாவை தரிசித்தனர்.

சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் தஞ்சாவூர் பெரிய கோவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

#ThanjavurBigTemple என்ற பெயரில் ஹேஷ்டாக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 3500 க்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டும், குடமுழுக்கு தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள், தஞ்சை பெரிய கோவிலின் போட்டோ ஆகியவற்றை பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.