ஐஸ்கிரீம்ல பச்சைமிளகாய்..🙄 ட்ரை பண்றீங்களா..!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
spice ice cream - 2026

மார்க்கெட்டுக்கு புதுசா வந்துருக்குற சாப்பாட்டு ஐட்டம் தான் ஜன்னத் மிர்ச்சி ஐஸ் க்ரீம் ரோல்.. அது என்ன என்றால், சாக்லேட், வெணிலா ஃப்ளேவர் மாதிரி ஒரு 100 எம்.எல். மிளகாய் ஐஸ் க்ரீம்

ஸ்பூன்ஸ் ஆஃப் இந்தூர் 2.0 என்ற யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த மிளகாய் ஐஸ்க்ரீம் வீடியோவை இதுவரை 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

முதலில் கொஞ்சம் நறுக்கிய பச்சை மிளகாய், பிறகு கொஞ்சம் நியூட்டெலா பிறகு க்ரீம். ஃப்ரீசரில் வைத்து ரோல் செய்து எடுத்து மீண்டும் சில மிளகாய் துண்டுகள்…

இந்த ரெசிபியை யாருக்காச்சும் செஞ்சு கொடுக்க விரும்புனா உடனே இந்த வீடியோவை பாருங்க.. உங்களோட பல நாள் கோபத்தை தீத்துக்க நிச்சயம் உதவியா இருக்கும்.

கொரோனா காலம் என்பதால் பலரும் வீட்டில் அமர்ந்து ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்று விடாமல் யோசித்துக் கொண்டே இருந்ததன் விளைவாக இந்த ஆண்டில் மேகி மில்க்‌ஷேக், ஓரியோ பக்கோடான்னு பல வெரைட்டிங்க வந்து போக துவங்கின. அதுல இப்போது இந்த ஐட்டம் கொஞ்சம் புதுசு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.