ladies finger mandi - 2026

வேண்டும் வேண்டும் என கேட்கத் தூண்டும் வெண்டைக்காய் மண்டி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
ladies finger mandi - 2026

வெண்டைக்காய் மண்டி

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – கால் கிலோ (பெரிய துண்டுகளாக்கவும்)
கத்திரிக்காய் – 2 (பெரிய துண்டுகளாக்கவும்)
உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)
அரிசி களைந்த நீர் – 2 கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கீறிய பச்சை மிளகாய் – 7 (அல்லது காரத்துக்கேற்ப)
தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 10 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
புளியை அரிசி களைந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெண்டைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.