kathrikai thirakal - 2026

எத்துணை ஐயிட்டம் இருந்தாலும் கலக்கல்.. இந்த கத்திரிக்காய்த் திரக்கல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kathrikai thirakal - 2026

கத்திரிக்காய்த் திரக்கல்

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 4 (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு – 2 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – ஒன்று
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க:
தேங்காய்த் துருவல் – கால் கப்
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு – 3 பல்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை, உடைத்த முந்திரி – தலா அரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். பிறகு அரைத்த விழுது, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

இதைக் குழிப்பணியாரம், ரவா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.