supremcourt 1 - 2026

தேசத்துரோக வழக்கு பதிய உச்சநீதிமன்றம் தடை!

சற்றுமுன்

தேசதுரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது.தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்படும் 124 (A) சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது. என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசவிரோத சட்டம் அமலுக்கு வந்து 162 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் சட்டத்தை பயன்படுத்த தடை. ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 13 ஆயிரம் பேர் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் உச்ச நீதிமனறம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

supremcourt 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.