cat 3 - 2026

அட.. பேசாம இருந்தா.. பாவம் பார்க்கும் ஆட்டிடம் பலத்தைக் காட்டும் பூனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
cat 3 - 2026

சுவாரஸ்யமான வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது. ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் தான் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டு இருக்கிறது.

அந்த வைரல் வீடியோவில், வீட்டிற்குள் பூனைக்குட்டி ஒன்றும், ஆட்டுக்குட்டி ஒன்றும் நேரெதிரே நின்று கொண்டு இருப்பதை காணலாம்.

அந்த பூனை அமைதியாக நிற்கும் ஆட்டுக்குட்டியை பாய்ந்து அடிக்க செல்கிறது, ஆனால் அடிக்காமல் வெறும் பயம் மட்டும் காட்டிவிட்டு ஓடிவந்து சுவற்றின் பின்னால் ஒளிந்து கொண்டு ஆட்டின் ரியாக்ஷனை பார்க்கிறது.

அந்த ஆடு அமைதியாக நிற்கிறது, ஆடு எதுவும் செய்யாததால் பூனைக்கு தைரியம் வந்து மீண்டும் ஓடி வந்து ஆட்டுக்குட்டியை தாக்குகிறது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஆட்டுக்குட்டியை தாக்க செல்கிறது, உடனே அந்த ஆட்டுக்குட்டி பயந்து ஓட முயல்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை ஐம்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த இரண்டு வளர்ப்பு பிராணிகளின் செயல்களை பார்த்த பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் வீடியோவிற்கு லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.