Homeஅரசியல்சீட் கிடைக்காத விரக்தி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி திட்டம்..?

சீட் கிடைக்காத விரக்தி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி திட்டம்..?

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ். பாரதி பேச்சு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் சில…

rsbharathi - Dhinasari Tamil

மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் கட்சியில் சீட் கிடைக்காத விரக்தியில் திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு ஏற்படும் என்று, ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால் ரவுடிகள் மூலம் திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்துக்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசுகையில், “தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனை ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.

“கடந்த அதிமுக., ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. கோடநாடு வழக்கில் தோண்டத் தோண்ட புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு தெரியவரும்.

“பிள்ளை பிடிக்கும் வேலையை பாஜக.,காரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையைப் பிடித்து பாஜக.,வில் சேர்த்துள்ளனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனைப் பிடித்து பாஜக.,வில் சேர்த்துள்ளனர்.

தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் பாஜக., தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக.,காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று பேசினார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ். பாரதி பேச்சு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் சில…


அண்ணாவை பற்றி விமர்சனம் செய்ததால், அதன்பின்பு கிருபானந்த வாரியாரால் எங்கும் சென்று சொற்பொழிவு ஆற்ற முடியாத அளவிற்கு செய்தனர் திமுகவினர். ஆகவே அண்ணாமலையை எச்சரிக்கிறேன், வாரியாருக்கு நேர்ந்தது தான் அவருக்கும் நடக்கும், பழைய திமுககாரனாக மாறினால் நடப்பதே வேறு… – RS பாரதி.

அண்ணாமலை வாரியார் சுவாமிகள் போன்றவர் அல்ல…
அதேபோல கட்சித் தலைவர் அண்ணாமலை காக்கிச் சட்டை அண்ணாமலையாக மாறினால் வாயில மிதிப்பார் பரவாயில்லையா ?
வாய் இருக்கேன்னு ஏதாவது பேசி , அண்ணாமலையி்டம் அசிங்கப்படாதீங்கடா


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை தாக்கிய புல்லத்தனத்தை இன்று ஒரு தீராவிட வக்கிரன் நினைவுபடுத்தியிருக்கிறான்.
அவனுக்கு தெரியாமலே அவன் மூன்று நல்ல விஷயங்களை செய்திருக்கிறான்.

  1. இந்துக்களுக்கு திராவிட இயக்கத்தின் உண்மை முகத்தை – அருவெருப்பான கோரமான கேவலமான முகத்தைக் காட்டியிருக்கிறான். வன்முறையும் ஆபாசமும் நிறைந்த அந்த முகம்தான் அவர்களின் உண்மை முகம். அதைக் காட்டியிருக்கிறான். இளந்தலைமுறை ஹிந்துக்களுக்கு எப்படிப்பட்ட அரக்க கும்பலை வாரியார் சுவாமிகள் போன்ற ஆன்மிக பெரியவர்கள் எதிர்த்து போரிட்டார்கள் என்பதைக் காட்டியிருக்கிறான்.
  2. அன்று ஆன்மிக பண்பாட்டு துறையில் தீராவிட இருளரக்கனை எதிர்த்து போரிட்டு நின்றவர் வாரியார் சுவாமிகள் என்றால் இன்று அரசியல் தளத்தில் சமரசமின்றி திமுக எனும் தீய பிற்போக்கு இனவாத கயமை சக்தியை எதிர்த்து போரிடும் ஆளுமை அண்ணாமலை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டான்.
  3. வாரியார் சுவாமிகளின் பெயரை பயன்படுத்தும் ஒருசில பிழைப்புவாதிகள் -அவர் என் குரு நான் அவர் அருளால் உருவானவன் – என்றெல்லாம் பேசுகிறவர்கள் இந்த அசிங்க உளறலுக்கு அமைதி காத்து தங்களை தாமே வெளிக்கொண்டுவரவும் உதவி செய்திருக்கிறான்.

வாழ்க!

  • அரவிந்தன் நீலகண்டன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,139FansLike
377FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,876FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

1 COMMENT

  1. அண்ணாமலை யும் கிருபானந்த வாரியாரும் ஒன்றால்ல தலைவரே…. இவரு முன்னாள் ips அதிகாரி… வாயிலியே மிதிச்சிற போறாரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...